சோம்பட்டு கிராமத்திற்கு அடிப்படை வசதி: காங்., வேட்பாளர் செல்வம் வாக்குறுதி
சோம்பட்டு கிராமத்திற்கு அடிப்படை வசதி: காங்., வேட்பாளர் செல்வம் வாக்குறுதி
ADDED : ஏப் 03, 2026 08:33 PM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று சோம்பட்டு கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர், நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது சாலை, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட்டது. தொகுதியில் 6 ஆயிரம் பேருக்கு மேல் முதியோர் உதவித்தொகையும், 4 ஆயிரம் பேருக்கு கல்வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி பெற்று தந்துள்ளேன். ஆனால், தற்போதைய எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் எவ்வித பணிகளை மேற்கொண்டதாக தெரியவில்லை.
மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்தால், இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பேன். மேலும், பட்டியல் இன மக்களுக்கு இலவச மனைபட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், 'கை' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தில் தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் குமார், செந்தில்வேலன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
