ADDED : பிப் 10, 2025 06:34 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், பாவேந்தர் கலை இலக்கிய திங்கள் விழா, 'பாவேந்தரும் பைந்தமிழும்' என்ற தலைப்பில், பாரதிதாசன் அரங்காட்சியகத்தில் நேற்று நடந்தது.
அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். ராஜஸ்ரீமகேஷ் வரவேற்றார். செயலர் வள்ளி, நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், மீனாட்சிதேவி கணேஷ், புவனேஸ்வரி, ரகுராமன், வேல்விழி சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு, வா தமிழா என்ற தமிழ் வளர்ச்சி பாடல் வீடியோ தயாரித்த, பிரான்சு சக்திக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். கலை பண்பாட்டு துறை முன்னாள் இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்துரை வழங்கினர். உலக தாய்மொழி நாள் முன்னிட்டு, பல கவிஞர்கள் கவிதை வாசித்தனர். படைப்பாளி ரமேஷ் பைரவி, பொய்யாது ஏகாம்பரம், மதன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். விசாலாட்சி நன்றி கூறினார்.

