/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாவாணர் நகரை மழைநீருடன் சூழ்ந்த கழிவுநீர்; கவர்னர், முதல்வர் ஆய்வு
/
பாவாணர் நகரை மழைநீருடன் சூழ்ந்த கழிவுநீர்; கவர்னர், முதல்வர் ஆய்வு
பாவாணர் நகரை மழைநீருடன் சூழ்ந்த கழிவுநீர்; கவர்னர், முதல்வர் ஆய்வு
பாவாணர் நகரை மழைநீருடன் சூழ்ந்த கழிவுநீர்; கவர்னர், முதல்வர் ஆய்வு
ADDED : ஜன 09, 2024 07:07 AM

புதுச்சேரி : பாவாணர் நகரில் மழைநீருடன் கலந்த கழிவுநீர் சூழ்ந்த குடியிருப்புகளை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் பெய்த கன மழை காரணமாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீருடன், கருப்பு நிறத்தில் கழிவுநீர் சூழ்ந்தது.
காரணம்
பெரம்பை மற்றும் மேட்டு வாய்க்காலில் ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், வயல்வெளி நகர் வழியாக பாவாணர் நகர் வரும் வாய்க்காலில் தடுப்பு ஏற்படுத்தி, வேல்ராம்பாட்டு ஏரி வழியாக புதிதாக அமைத்த வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் அனுப்பப்படும்.
இந்த முறை அங்கு தடுப்புகள் அமைக்காததால், மேட்டு வாய்க்காலில் இருந்து வரும் மழைநீர் பாவாணர் நகர் பகுதியை சூழ்ந்தது. அங்குள்ள சில வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்தது. மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
முதல்வர் ஆய்வு
பாவாணர் நகரில் மழை பாதிப்புகளை முதல்வர் ரங்கசாமி நேற்று காலை ஆய்வு செய்தார்.
குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்த பெண்கள், தாங்கள் 30 ஆண்டுகளாக இப்பகுதியில் குடியிருக்கிறோம். மழையின்போது கழிவுநீர் வாய்க்காலில் வரும் நீரும், மழைநீருடன் சேர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்வதால், தோல் வியாதிகள் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'இனி இதுபோன்ற பிரச்னை வராது. வாய்க்கால் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.
கவர்னர் ஆய்வு
கவர்னர் தமிழிசை நேற்று மாலை பாவாணர் நகர் பகுதியில் ஆய்வு செய்தார்.
பின், அவர், கூறுகையில்; இப்பகுதியில் ஏற்படும் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 5 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவர். விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
காங்., ஆய்வு
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., பாலன் ஆகியோர் பாவாணர் நகர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.