ADDED : ஜூன் 08, 2025 10:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : உலக பெருங்கடல் தினத்தையொட்டி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் கடற்கரை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
காலாப்பட்டு ஸ்ரீமா கடற்கரையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் எப் அண்ட் எப் பவுன்டேஷன் சார்பில், உலக பெருங்கடல் தினத்தையொட்டி, கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் சேர்மன் லட்சுமிபதி, ஆயுட்கால உறுப்பினர்கள் பிரதீஷ் இருதயராஜ், ஆரோக்கியசாமி, நுார் சாகிப், எப் அண்ட் எப் பவுன்டேஷன் நிர்வாகிகள், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.