ADDED : மார் 06, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திய கடலோர காவல்படை, புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதி சார்பில், கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாண்டி மெரினா கடற்கரையில், துாய்மைப் பணி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், இந்திய கடலோர காவல்படை புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதி கமாண்டர் டஸிலா கலந்து கொண்டு, கடலோரப் பாதுகாப்பு குறித்தும் கடலோரப் பகுதிகளை துாய்மைப் படுத்துவதின் அவசியம் குறித்தும் விளக்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், தன்னார்வாலர்கள் கலந்து கொண்டனர்.

