/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'செல்பி' பாயிண்டாக மாறியது கடற்கரை சாலை கழிவறைகள்
/
'செல்பி' பாயிண்டாக மாறியது கடற்கரை சாலை கழிவறைகள்
ADDED : ஜன 01, 2025 06:56 AM

புதுச்சேரி : செல்பி பாயிண்டாக மாறிய புதுச்சேரி கடற்கரை சாலை கழிவறைகளில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்த ஆண்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகவே புதுச்சேரி சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை, ஒயிட் டவுன், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மகிழ்வான பயண அனுபவம் ஏற்படும் வகையில், புதுச்சேரி நகராட்சி கடற்கரை சாலையில் உள்ள பழைய சாராய ஆலை, நேரு சிலை சதுக்கம், லே கபே எதிரில், டூப்லெக்ஸ் சிலை சதுக்கம், பழைய துறைமுக வளாகம், வைத்திக்குப்பம் மரவாடி ஆகிய பகுதிகளில் உள்ள கழிவறைகள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சுவர் ஓவியங்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

