ADDED : பிப் 16, 2024 07:18 AM

புதுச்சேரி : ராஜிவ் சதுக்கம் சுத்தம் செய்து, அழகு செடிகள் நடவு செய்யும் பணி துவங்கியது.
இந்திரா, ராஜிவ் சதுக்கங்களை சுற்றிலும் பேனர்களை கட்டி அலங்கோலப்படுத்தி வந்தனர். மேலும், ரவுண்டானா மற்றும் சிக்னல் ஓரம் உள்ள சிறிய பூங்காக்கள் பராமரிப்பு இன்றி செடிகள் வளர்ந்தும், குப்பை குவிந்தும் அலங்கோலமாக கிடந்தது.
இதை கண்ட முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து இரு சதுக்கம் பகுதியை சுத்தம் செய்யவும், அங்கு அழகு செடிகள் நட்டு பராமரிக்கவும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள், சுத்தம் செய்து, அழகு செடிகள் வளர்க நடவு பணிகள் செய்து வருகின்றனர். ராஜிவ் சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் பட்டுரோஸ் செடிகளும், சிக்னல் ப்ரிலெப்ட் பகுதியில் கொரியன் புற்கள், அழகு செடிகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இதுபோல் இந்திரா சிக்னல் பகுதியிலும் சுத்தம் செய்து செடிகள் நடவு பணிகள் நடக்கிறது.