/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குப்பை தொட்டியாகிறது கடல் நீர்வள ஆய்வாளர் வேதனை
/
குப்பை தொட்டியாகிறது கடல் நீர்வள ஆய்வாளர் வேதனை
ADDED : அக் 09, 2024 05:20 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த உலகத் தர நிர்ணய தின நிகழ்ச்சியில் பங்கேற்ற, இடைநிலை நீர் வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பு தலைவரான பேராசிரியர் ஜனகராஜன் பேசியதாவது:
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபரில் நடந்தாலும், வெப்ப தாக்கத்தால் கூட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வெயில் சுட்டெரித்த போதிலும், மழையும் பெய்துள்ளது.
இச்சம்பவம், கணிக்க முடியாத வகையில் கால நிலை மாற்றத்தையே காட்டுகிறது.
அதன்படியே வெப்பத்தால் பல்லுயிர் அழிந்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
வட, தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வருகிறது. இதனால், கடல் நீர் மட்டும் உயர்ந்து வருகிறது.
இதனால், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல தமிழக கடலோரப் பகுதிகள் பாதிக்கும். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை மரங்கள் மட்டும் தரவில்லை. ஓசோன் மூலமும் கிடைக்கிறது.
அதில் கடலின் பங்கு முக்கியமானது. ஆனால், தற்போது கடலை பெருங்குப்பை தொட்டியாக்கி வருவது சரியல்ல''.
இவ்வாறு அவர் பேசினார்.

