தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : செப் 15, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் உழவர் உதவியகத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ் நடந்த முகாமில், துணை வேளாண் இயக்குநர் குமாரவேல்  தலைமை தாங்கி, தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன், தேனின் மருத்துவ குணம் குறித்து பேசினார். காலாப்பட்டு லட்சுமி தேனீ பண்ணையாளர் மதனகுமார், தேனீ வளர்பின் முக்கியத்துவம், வளர்க்கும் முறை, தேனை மதிப்பு கூட்டி எப்படி விற்பனை செய்வது குறித்து விளக்கினார். 

கரிக்கலாம்பாக்கம் ஆத்மா நெல் உற்பத்தியாளர் குழு பாக்கியவதி, தேனில் தினை மாவு, அரிசி மாவு,  நெல்லிக்காய், போன்றவற்றின் மூலம் மதிப்பு கூட்டுவது குறித்து விளக்கினார். பாகூரில் தங்கி ஊரக வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் தேனின் மகத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

பாகூர், குருவிநத்தம், இருளஞ்சந்தை, சேலியமேடு, அரங்கனுார் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, பாகூர் வேளாண் அலுவலக செயல் விளக்க உதவியாளர் கதிர்வேல், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us