/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் கொடுத்தவருக்கு பீர் பாட்டில் குத்து
/
கடன் கொடுத்தவருக்கு பீர் பாட்டில் குத்து
ADDED : நவ 18, 2025 05:41 AM
புதுச்சேரி: பணம் கடனாக கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் உறவினரை பீர்பாட்டிலால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
குருசுகுப்பத்தை சேர்ந்தவர் சீனு, 40; மீனவர். இவர், தனது உறவினர் சோலை நகரை சேர்ந்த ராஜசேகரன், 35; என்ப வருக்கு, 65 ஆயிரம் ரூபாயை, கடனாக கொடுத்தார்.
பணம் தருவதாக ராஜசேகர் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனுவை அழைத்து சென்று, அங்கு இருவரும் மது குடித்தனர்.
பின் ராஜசேகரன் வாங்கிய பணத்தில் 45 ஆயிரம் பணத்தை, சீனுவிடம் கொடுத்துள்ளார்.
ஏன் முழு பணத்தை கொடுக்காமல், பாக்கி வைக்கிறாய் என சீனு கேட்டார்.
இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.அதில், ஆத்திரமடைந்த ராஜசேகர், பீர் பாட்டிலால் சீனு தலையில் குத்தினார்.
காயமடைந்த அவர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனு கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜசேகரனை தேடிவருகின்றனர்.

