/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் கிறிஸ்துமஸ் விழாவிற்காக பெல்ஜியம் முறையில் சாக்லெட் தயாரிப்பு

ADDED : டிச 22, 2024 07:15 AM

வானுார் : ஆரோவில் டிரீமஸ் காப்பி ஷாப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெல்ஜியம் முறையில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட சாக்லெட் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, ஆரோவில் விசிட்டர் சென்டர் வளாகத்தில் அமைந்துள்ள 'டிரீமஸ்' காப்பி ஷாப்பில், பெல்ஜியம் முறையில் இயற்கையாக கிறிஸ்துமஸ் சாக்லெட் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
டிரீமஸ் காப்பி ஷாப் உரிமையாளர் செல்வம் கூறுகையில், 'இங்கு இயற்கையான தரமான மூலப்பொருட்களை கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்கி வருகிறோம்.
கிறிஸ்துமஸ் விழா கேக், கிலோ ரூ. ஆயிரம் முதல் 1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. முதன் முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கைவினை மூலம் இயற்கை முறையில் பெல்ஜியம் முறையில் சாக்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
மின்ட் சாக்லெட், வெள்ளை சாக்லெட், டார்க் சாக்லெட், ஆரஞ்சு சாக்லெட், மோகோ சாக்லெட் என சுவை மிக்க சாக்லெட் தயாரித்து விற்கப்படுகிறது. 50 கிராம் ரூ. 130க்கு விற்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்' என்றார்.