sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு

/

26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு

26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு

26 வேட்பாளர்களின் செலவு ரூ.1.35 கோடி தானாம் நம்புங்க...; மாநில தேர்தல் துறை இறுதி செய்து வெளியீடு


ADDED : ஜூலை 04, 2024 03:34 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் செய்த செலவின தொகையை மாநில தேர்தல் துறை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் செலவு செய்ய உச்சவரம்பு எல்லை இல்லை. இருப்பினும், அரசியல் கட்சி, வேட்பாளர்கள் தனித்தனியே வங்கி கணக்கு ஆரம்பித்து, செலவின கணக்கினை பராமரித்து தாக்கல் வேண்டும். இதில் வேட்பாளர்களின் டிபாசிட் தொகை கணக்கில் கொள்ளப்படாது என, தேர்தல் துறை அறிவித்தது.

அதன்படி புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் போட்டியிட்ட சூழ்நிலையில் தொண்டர்களுக்கும், பிரசாரத்திற்கும் லட்சக்கணக்கில் வாரி இறைத்தனர்.

விரலுக்கு ஏற்ற வீக்கமாக சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் செலவு செய்தனர்.

வேட்பாளர்களின் அனைத்து செலவினங்களை, தேர்தல் செலவின பிரிவு கண்காணித்து பதிவு செய்து வந்தது. கடந்த 30ம் தேதியுடன் 26 வேட்பாளர்கள் செய்த கணக்கு செலவினம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் தேர்தல் செலவினத்தை மாநில தேர்தல் செலவின பார்வையாளர்கள் முகமது மன்சூருல் ஹசன், லட்மிகாந்தா, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் இறுதி செய்தனர். செலவு விபரம் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்களும் 1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 801 ரூபாய் செலவு செய்துள்ளனர்.

லட்சத்தில்....


லோக்சபா தேர்தலில் 75 லட்சம் செலவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இத்தொகைக்குள்ளளாகவே 26 வேட்பாளர்களும் செலவு செய்ததாக கணக்கு சமர்ப்பித்துள்ளனர். பிரதான கட்சி வேட்பாளர்களில் ஐந்து பேர் மட்டும் லட்சத்தில் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., 39 லட்சத்து 80 ஆயிரத்து 196 ரூபாய் செலவு செய்துள்ளார். பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் 53 லட்சத்து 29 ஆயிரத்து 927 ரூபாய் செலவு செய்துள்ளார். இதன் மூலம் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை காட்டிலும் 13 லட்சத்து 49 ஆயிரத்து 731 ரூபாய் குறைவாகவே செலவு செய்து வைத்திலிங்கம் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அடுத்ததாக அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் 26 லட்சத்து 18 ஆயிரத்து 927 ரூபாய், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7 லட்சத்து 73 ஆயிரத்து 480 ரூபாய், சுசி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சங்கரன் 1 லட்சத்து 35 ஆயிரத்து 978 ரூபாய் செலவு செய்துள்ளனர்.

ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை


மற்ற 21 வேட்பாளர்கள் 1 லட்சத்திற்குள்ளாகவே செலவு செய்துள்ளனர். பெட்ரோல் பங்க் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரம் போடு சின்னத்தில் போட்டியிட்ட மற்றொரு சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று தங்களுடைய தேர்தல் செலவின கணக்கில் தெரிவித்துள்ளனர்.

செங்கல் சின்னத்தில் போட்டியிட்ட கொளஞ்சியப்பன் 2,614 ரூபாய், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் 6,618 ரூபாய் செலவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு லோக்சபா தேர்தலில் சில வேட்பாளர்கள் கணக்குகளை சரிவர தாக்கல் செய்யாமல் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழப்பர். இந்தாண்டு முதல் முறையாக அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவினத்தை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us