/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளி பட்டமளிப்பு விழா
/
பெத்தி செமினார் பள்ளி பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 27, 2025 04:56 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் தாத்தா - பாட்டி தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பளராக கல்வித்துறை அமைச் சர் நமச்சிவாயம் பங்கேற்று, யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, பேசுகையில், 'புதுச்சேரியில் உயர்ந்த கல்வி தரத்துடன் மாணவர்களை பண்படுத்தும் முயற்சியில் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி பல சாதனைகளை படைத்து வருகிறது' என்றார்.
விழாவில் தமிழ் பண்பாட்டின் சிறப்பே, வயதில் மூத்தோரை மதித்து அவர்களின் வழிகாட்டுதலின்படி நடப்பது ஆகும்.
அதனை மெய்யாக்கும் வகையில் பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் ஏற்பாடு செய்திருந்த தாத்தா - பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
யு.கே.ஜி., மாணவர்களின் தாத்தா பாட்டிகள் கலந்து கொண்டு பள்ளி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

