/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை
/
பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் கின்னஸ் உலக சாதனை
ADDED : ஆக 29, 2025 03:19 AM

புதுச்சேரி: பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2 மாணவர்களின் கின்னஸ் உலக சாதனை முயற்சி பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களின் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர் அமன்சர்மா, அரசு உதவி வழக்கறிஞர் அருண், அரசு துணை தணிக்கையாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாணவர்களின் சாதனை முயற்சியை துவக்கி வைத்தனர்.
இதில், ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறிடித்து 8ம் வகுப்பு மாணவர் ஆலன் டேரியஸ் ரீல் 72 விலங்குகளின் அறிவியல் பெயர்களை அடையாளம் கண்டு 1 நிமிடத்திலும், முதலாம் வகுப்பு மாணவர் அன்வித் 54 பறவைகளை விரைவாக அடையாளம் கண்டு, 1 நிமிடத்திலும் கூறினர்.
தொடர்ந்து, உயர் கல்வித்துறைத் இயக்குநர் அமன் சர்மா பேசுகையில், 'மாணவர்களால் அனைத்தையும் சாதிக்க முடியும். அவர்களால் முடியாதது எதுவும் இல்லை. நன்றாக திட்டமிட்டு உழைத்தால், குறிக்கோளை விரைவில் அடைய முடியும் என்பதற்கு இந்த கின்னஸ் உலக சாதனை நிகழ்த்திய 2 மாணவர்களும் உதாரணம். இவர்களை போன்று மற்ற மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும்' என்றார். சாதனை மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.