/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை
/
வேதபாரதி சார்பில் மார்கழி மாத பஜனை
ADDED : ஜன 02, 2025 06:38 AM

புதுச்சேரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, வேதபாரதி சார்பில் நேற்று மார்கழி மாத பஜனை நடைபெற்றது.
நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காத்திடும் பொருட்டு வேதபாரதி அமைப்பு, புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளாக மார்கழி மாத வீதி பஜனை மற்றும் ராதா மாதவ திருக்கல்யாண வைபம் நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 7 ம் ஆண்டு மார்கழி மாத பஜனை வீதியுலா நேற்று நடந்தது.
புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று காலை 6:00 மணிக்கு பஜனை வீதியுலா துவங்கியது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
வேதபாராயணம், பஜனை, கோலாட்டம், கும்மியாட்டம், பரதம், திருப்பாவை, திருவெம்பாவையுடன் நடைபெற்ற பஜனை மாட வீத என பக்தியுடன் பஜனை மாட வீதிகள் வழியாக சென்று காலை 8:30 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் நிறைவடைந்தது.
வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில், சித்தன்குடி, ஜெயராம் திருமண மண்டபத்தில், ராதா மாதவ திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை புதுச்சேரி வேதபாரதி செய்துள்ளது.