/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரத் பள்ளி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
/
பாரத் பள்ளி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
பாரத் பள்ளி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
பாரத் பள்ளி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு
ADDED : செப் 20, 2024 03:38 AM

வில்லியனுார்: ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த தேர்தலில் மாணவர் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் தலைவர், விளையாட்டு துறை தலைவர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தேர்தல் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கான பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் எஸ்.பி., மாறன், முன்னாள் ராணுவ அதிகாரி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்து, பள்ளியில் விளையாட்டு துறையில் நான்கு அணிகளுக்குறிய கொடி மற்றும் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.