/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
/
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
சாரதாம்பாள் கோவில் மகோற்சவ விழா மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சி
ADDED : டிச 25, 2024 07:19 AM

புதுச்சேரி : புதுச்சேரி எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், 13ம் ஆண்டு, மகோற்சவ விழாவையொட்டி, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி மாதத்தில், 30 நாட்கள் நடக்கும், மகோற்சவ விழா, கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும், மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, கோவிலில், விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இன்று, 25ம் தேதி, காலை 9:00 மணிக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. இரவு முருங்கப்பாக்கத்தில் உள்ள சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 26ம் தேதி, முரளிதர சுவாமியின், மதுர கீதங்கள் நிகழ்ச்சியும், சென்னை அஸ்வின் பாகவதர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.