ADDED : மார் 20, 2025 04:47 AM

திருபுவனை: மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 45ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
பள்ளி கல்விக்குழு தலைவர் பழனி தலைமை தாங்கினார். புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், துணைத் தலைவர் முருகையன், பொதுச்செயலாளர் ராம சிவராஜன், இணைச் செயலாளர் சம்பத், பொருளாளர் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் இளமதியழகன் வரவேற்றார்.
கடந்த 2023-24ம் கல்வியாண்டில் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் பரிசு வழங்கி பாராட்டினார்.
அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை தலைவர் பாலாஜி, புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற உளவியல் துறை தலைவர் பாஞ்ச் ராமலிங்கம், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் ராஜிவ் சிறப்புரையாற்றினர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.