UPDATED : ஜூலை 20, 2026 06:03 PM
ADDED : ஜூலை 20, 2026 05:52 PM
அரியாங்குப்பம்: பாரதியார் பல்கலைக்கூடத்தில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நுண்கலைத்துறை மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுண்கலைத்துறையில் கடந்த 36 ஆண்டுகளுக்கு பின் 11 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களின் பணி ஆணையை மீறும் விதமாக கல்லுாரி நிர்வாகம் செயல்படுவதை கைவிட வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக பேராசிரயர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகுதி நேரமாக பணி புரியும் 11 கவுர விரிவுரையாளர்கள் பணி தொடர வேண்டும். இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நுண்கலைத்துறை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. நுண்கலைத்துறையை அழிக்கும் முயற்சியை கல்லுாரி நிர்வாகம் கைவிட வேண்டும்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையை இணைக்க வேண்டும். நுண்கலைத்துறை மற்றும் நிகழ் கலைத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும். நுண்கலைத்துறைக்கு தனியாக முதல்வர் நியமிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
