/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் பிறந்தநாள் கவியரங்கம்
/
பாரதிதாசன் பிறந்தநாள் கவியரங்கம்
ADDED : மே 05, 2025 06:07 AM
புதுச்சேரி : அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், புதுச்சேரி கிளை சார்பில் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு கவியரங்கம் நடந்தது.
புதுச்சேரி கிளை அவைத்தலைவர் ஏழுமலை வரவேற்றார். செயலாளர் கண்ணன் அறிமுக உரையாற்றினார். சங்க பொதுச்செயலாளர் ராமானுஜம் நோக்கவுரை ஆற்றினார். தேசியத் தலைவர் பெரியண்ணன் தலைமை தாங்கினார்.
பாரதிதாசனின் 'தமிழ்த் தேசம்' எனும் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முருகையன், பேராசிரியர்கள் சரளா தேவி, கோவலன், குமரகுரு, உரு அசோகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கவிதைகளை வசித்தனர்.
சங்கத்தின் புதுச்சேரி கிளை பொருளாளர் குணசேகர் நன்றி கூறினார். முன்னதாக பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதிதாசன் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.