/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
/
பாகூர் அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
ADDED : டிச 12, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாரதியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு, பாகூர், பாரதி அரசு மேநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், வடிவேலு தலைமையில், அரிதாஸ், நெல்சன், செல்வராசு, வெங்கடாசலம், சுந்தரையா, மோகன், சுகதேவ், இளந்திரையன் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். முருகையன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

