/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு மனு
/
பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு மனு
ADDED : ஜன 23, 2025 05:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு பொறுப்பாளர்கள் கிருத்திகா, தீபன், ஆர்த்தி, கோகிலா, விமலாதேவி ஆகியோர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் பெண் ஐ.பி.எஸ்., தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் டீன் பொறுப்பேற்க வேண்டும்.
வளாகப் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக் கழகம் முழுதும் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும்.
மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். புதுச்சேரி முழுதும் உள்ள கல்வி நிறுவனங்களில் வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தி, மேற்பார்வையிட மாநில மாணவர் பாதுகாப்பு குழுவை நிறுவ வேண்டும்.