/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.40.29 லட்சம் செலவில் சாலைப் பணிக்கு பூமி பூஜை
/
ரூ.40.29 லட்சம் செலவில் சாலைப் பணிக்கு பூமி பூஜை
ADDED : மார் 05, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: செல்லிப்பட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடைபெற்றது.
திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராம சாலை மற்றும் விநாயகர் கோவில் சாலைகள் ரூ.40.29 லட்சம் செலவில் தார் சாலையாக மேம்படுத்தப்படட உள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர் வீரசெல்வம், கோட்ட செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் கலந்து கொண்டனர்.

