/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டில் புதிய மின்மாற்றி அமைக்க பூமி பூஜை நடந்தது
/
மதகடிப்பட்டில் புதிய மின்மாற்றி அமைக்க பூமி பூஜை நடந்தது
மதகடிப்பட்டில் புதிய மின்மாற்றி அமைக்க பூமி பூஜை நடந்தது
மதகடிப்பட்டில் புதிய மின்மாற்றி அமைக்க பூமி பூஜை நடந்தது
ADDED : ஜூலை 07, 2025 01:38 AM

திருபுவனை: மதகடிப்பட்டில் மின்பற்றாக்குறையை போக்க ரூ.19.78 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு கிராமத்தில் ரமாபுரம், திருமுருகன் கோல்டன் சிட்டி, டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் கடும் மின் அழுத்த குறைபாடு நிலவி வந்தது. இதனால் மின் உபகரணங்கள் அடிக்கடி பழுதானதானதால், மின்நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எம்.எல்.ஏ., அங்காளன் முயற்சியில் பிரதம மந்திரி ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ் ரூ.19.78 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆர்.டி.எஸ்.எஸ்., திட்டத்தின் கீழ் புதிய மின்மாற்றி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது.
மின்மாற்றி அமைப்பதற்கான துவக்கவிழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருபுவனை துணை மின் நிலைய உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் பழனிவேலு மற்றும் மின்துறை ஊழியர்கள் ஊழியர்கள், மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன் மூலம், ரமாபுரம், திருமுருகன் கோல்டன் சிட்டி, டீச்சர்ல் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 200 மின் நுகர்வோர்கள் பயன் பெறுவர்.