/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனையில் சாலை அமைக்க பூமி பூஜை
/
திருபுவனையில் சாலை அமைக்க பூமி பூஜை
ADDED : ஜன 30, 2024 05:53 AM

திருபுவனை : திருபுவனை ஸ்ரீநிவாசன் நகரில் ரூ.25 லட்சம் செலவில் உட்புற தெருக்களுக்கு கருங்கல் ஜல்லி சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் எம்.எல்.ஏ., அசோக்பாபுவின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (2022-2023) கீழ் திருபுவனை கிராமத்தில் ஸ்ரீநிவாசன் நகரில் உட்புற சாலைகளுக்கு கருங்கல் ஜல்லி சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, அங்காளன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன்,. உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுணன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர், திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன் (எ) வெங்கடாசலபதி, பா.ஜ.க., மண்டல பொறுப்பாளர் பாஸ்கரன், வில்லியனுார் மாவட்ட பா.ஜ., தலைவர் அனிதா மற்றும் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.