
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடந்தது.
கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., தலைமைச் செயலர் சரத் சவுகான், போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, செயலர் ஜெயந்த குமார் ரே, அரசு மற்றும் தனியார் சார்பில் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை இயக்குநர் வெர்பினா ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.