/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீகார் எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு
/
பீகார் எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு
ADDED : ஜன 09, 2024 07:12 AM

புதுச்சேரி : புதுச்சேரிக்கு வந்துள்ள பீகார் சட்டசபை நிலைக்குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து பேசினர்.
பீகார் சட்டசபை நிலைக்குழுவின் தலைவர் பிரமோத்குமார் தலைமையில் 6 எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் நேற்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது, புதுச்சேரி சட்டசபை மற்றும் பேரவையின் பல்வேறு நிலைக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், இங்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். முன்னதாக, பீகார் சட்டசபை நிலைக்குழுவினர் புதுச்சேரி சட்டசபை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தனர்.