/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பைக் -- மினி பஸ் மோதல்; சென்னை வாலிபர்கள் பலி
/
பைக் -- மினி பஸ் மோதல்; சென்னை வாலிபர்கள் பலி
ADDED : அக் 12, 2025 11:11 PM

கோட்டக்குப்பம்,; கோட்டக்குப்பம் அருகே பைக் மீது மினி பஸ் மோதிய விபத்தில், சென்னை வாலிபர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை, பல்லாவரம், நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் மதன்குமார், 24; சென்னை பனையூரை சேர்ந்தவர் கணேஷ், 28; ஐ.டி., ஊழியர்களான இருவரும், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புதுச்சேரியை சுற்றி பார்க்க, யமஹா பைக்கில், இ.சி.ஆர்., சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை மதன்குமார் ஓட்டினார்.
புதுச்சேரி அடுத்த கோட்டக்குப்பம், கெங்கை நகர் அருகே வந்தபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி பஸ், பைக் மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட இருவரும் உயிரிழந்தனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, பெங்களைரைச் சேர்ந்த மினி பஸ் டிரைவர் அவிநாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.