ADDED : செப் 08, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் கீழகாசாகுடி ரபீ நகர் பகுதியை சேர்ந்த வசந்தன், 45; கோட்டுச்சேரி காமராஜர் சாலையில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 13ம் தேதி மாலை காரைக்கால் கடைத்தெருவுக்கு வந்த அவர் இரவு பாரதியார் சாலையில் உள்ள உணவகம் மற்றும் பார் வாசலில் தனது பைக்கை சாவியுடன் நிறுத்திவிட்டு பாருக்குள் சென்றுள்ளார்.
பின்னர் வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். மேலும் பைக்கில் தனது இரு மொபைல் போன்களையும் வைத்திருந்தார்.
எங்கு தேடியும் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பைக் மற்றும் மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
