தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளம் துார்வாரும் பணி : முதல்வர் துவக்கி வைப்பு

 குளம் துார்வாரும் பணி : முதல்வர் துவக்கி வைப்பு

 குளம் துார்வாரும் பணி : முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : செப் 08, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 08:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: மங்கலம் தொகுதி கணுவாப்பேட்டை லுார்து நகரியில் குளம் துார்வாரும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலம் சார்பில் மத்திய அரசு, விக்சித் பாரத் கிராமின் வேலைவாய்ப்பு மற்றும் ஆஜீவிகா இயக்கதிற்கான உத்தரவாதம் திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதி கணுவாப்பேட்டை லுார்து நகரில் உள்ள குளம் துார்வாரும் பணி துவக்க விழா நடந்தது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று குளம் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் ரவிக்குமார், மோகன்தாஸ், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரன், முன்னாள் சேர்மன் பாலமுருகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். லுார்து நகர் குளம் துார்வாரப்பட்டு, மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைப்பதால், கணுவாப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us