நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் காதர் சுல்தான் வீதியை சேர்ந்த முஹமது சித்திக் மரைக்காயர். இவர் வரி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.பின்னர் வந்து பார்த்த போது பைக் காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் நகர போலீசார் பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.