நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதி பூங்கா அருகே நிறுத்தப்பட்டிருந்த இன்ஜினியர் பைக்கை திருடியவரை போலீசார் தேடிவருகின்றனர்.
நையினார்மண்டபம், கிழக்கு வாசல் நகரை சேர்ந்தவர் சக்திவேல், 54; சிவில் இன்ஜினியர். இவர் கடந்த 21ம் தேதி மாலை 5:30 மணிக்கு தனது பைக்கை , பாரதி பூங்கா பெருமாள் கோவில் அருகே நிறுத்திவிட்டு,கடற்கரைக்கு சென்றார்.
பின் மீண்டும் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

