ADDED : ஆக 19, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வானுார் அடுத்த ரங்கநாதபுரம், மயிலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அரிராமன், 56; சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் டிராக்டர் டிரைவர். கடந்த 6ம் தேதி இரவு பணிக்காக கம்பெனிக்கு வந்த அரிராமன், தனது பைக்கை (டி.என்.06 கே 3601) கம்பெனி வெளியே வாசலில் விட்டு, வேலைக்கு சென்றார்.
மறுநாள் வேலை முடிந்து வந்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து அரிராமன் சேதராப்பட்டு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
