ADDED : ஆக 19, 2026 05:22 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில், ‘அறிந்ததும் அறியாததும்’ என்ற தலைப்பில் பொது அறிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை செல்வாம்பாள் தலைமை தாங்கினார். ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். ஆசிரியைகள் வசந்தி, திவ்யா, ஆயிஷாபர்வீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராகக் ஓய்வு பெற்ற வரலாற்று விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி கலந்துகொண்டு ‘அறிந்ததும் அறியாததும்’ என்ற தலைப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களையும், பொது அறிவு தொடர்பாக வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தினார்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வினாக்களுக்கு பதில் கூறினர். பாரதி, பாரதிதாசன், நேரு என மூன்று குழுக்களாக மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் கணிதம் பெட்டி பரிசளிக்கப்பட்டன. ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார். ஆசிரியைகள் கிருஷ்ணப்பிரியா, சண்முகப்பரியா, சத்யா, ஸ்வர்ணலட்சுமி, கனகா, சத்தியவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
