தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சைக்கிள் மீது பைக் மோதல்: இரண்டு பேர் படுகாயம்

 சைக்கிள் மீது பைக் மோதல்: இரண்டு பேர் படுகாயம்

 சைக்கிள் மீது பைக் மோதல்: இரண்டு பேர் படுகாயம்


ADDED : ஜன 20, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில், 2 பேர் படுகாயமடைந்தனர்.

பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாலு, 60; இவர் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்கியூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு சுமார் 7.00 மணியளவில், தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் -- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பின்னாட்சிக்குப்பம் சந்திப்பு அருகே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, கடலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பைக்கை ஓட்டிச் சென்ற நபர், சைக்கிள் மீது மோதி உள்ளார். இந்த விபத்தில், இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us