ADDED : செப் 19, 2024 11:09 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 31. இவர், கடந்த 15ம் தேதி தனது பைக்கை கோரிமேடு போலீஸ் பயிற்சி மைதானத்தில் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், டி.நகர், போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
