நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூலக்குளம், ரமணாபுரம் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 51.இவர் மேட்டுப்பாளையத்தில் பித்தளை விளக்கு பாலிஷ் போடும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 25ம் தேததி காலை 6:40 மணிக்கு தனது பைக்கை (பி.ஒய்.05. கியூ 6509) கடை முன்பு நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.