ADDED : செப் 03, 2026 03:21 PM
அ நிறம் | அளவு
பாகூர்: வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் திருநகர் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் 24; இவர், கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எலெக்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். தற்போது, இவர் காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் வாடகையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்த நரேஷ்குமார், தனது யமகா ஆர்.ஒன் 5 பைக்கை, வாசலில் நிறுத்தி விட்டு துாங்கி சென்றார். மறுநாள் காலை பார்த்த போது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
