UPDATED : அக் 10, 2026 07:31 PM
ADDED : அக் 10, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்,26; டயாலிசீஸ் டெக்னிஷியன். இவர் கடந்த 6ம் தேதி, அண்ணா நகர் 9 குறுக்குத் தெருவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவரை பார்ப்தற்காக தனது பல்சர் பைக்கை (பிஒய்.05.விபி.8448) நோயாளியின் வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார்.
மறுநாள் பார்த்தபோது, பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
