தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 10, 2026 07:31 PM

ADDED : அக் 10, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 07:31 PM ADDED : அக் 10, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது இடத்தில் ரகளை

9 பேர் அதிரடி கைது

சேதராப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வசந்தராஜன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ராயபுதுப்பாக்கம் ஆனந்தராஜ், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கனகசெட்டிக்குளத்தில் ரோந்து சென்றனர். பிம்ஸ் சாலையில், பொது இடத்தில் ரகளை செய்த, மரக்காணம் கந்தாடு பகுதியை சேர்ந்த கவுதம்,23, என்பரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் சிறப்பு ஏட்டு ஜெயச்சந்திரன், நேற்று முன்தினம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆபாசமாக பேசி பொதுக்களிடம் ரகளையில் ஈடுபட்ட பங்கூர் பிரசாந்த்,25; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் கோட்டைமேடு சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். பொது இடத்தில் ரகளை செய்த, விழுப்புரம், ஏமப்பூரை சேர்ந்த விக்னேஷ், 23, என்பவரை கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் சிறப்ப உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவா, நேற்று முன்தினம் கோர்காடு பகுதியில் ரோந்து சென்றார். பைபாசில், பிள்ளையார் கோவில் அருகில் குடிபோதையில் தகராறு செய்த நல்லாத்துார் கார்த்திக்,35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். தேங்காய்திட்டு மெயின்ரோட்டில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட தேங்காய்திட்டு, கோபி,47; என்பவரை கைது செய்தனர்.

அதேபோல், தேங்காய்திட்டு வசந்த நகரில், குடிபோதையில் ரகளை செய்த, முதலியார்பேட்டை முருகன்,48; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன் கனகன் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றார். அங்கு ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட கவுண்டன்பாளையம் மணிகண்டன்,21, என்பவரை கைது செய்தார்.

காட்டேரிகுப்பம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வி.பரங்கணி பகுதியை சேர்ந்த சேதுபதி,24, என்பவரை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us