/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உண்டியல் உடைத்த வழக்கு; ஒருவர் கைது
/
உண்டியல் உடைத்த வழக்கு; ஒருவர் கைது
ADDED : அக் 05, 2024 11:13 PM
அரியாங்குப்பம்: கோவில் உண்டியலை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலை செட்டிக்குளம் பகுதியில் உள்ள நாகமுத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்தார்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்தபோது அவர், தப்பி சென்றார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலை பகுதியை சேர்ந்த சங்கர், 45; என்பவர், உண்டியலை உடைத்தது தெரிய வந்தது. இவர் மீது, நாட்டு வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட வழக்குள் உள்ளன.
அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.