தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிம்ஸ் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

 பிம்ஸ் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

 பிம்ஸ் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : ஜூன் 20, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 08:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது.

இளநிலை மருத்துவ-2020 பேட்ச் மற்றும் முதுநிலை மருத்துவ - 2022 பேட்ச் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் இளநிலை மாணவர்களுக்கான உறுதிமொழியை வாசித்தார். கல்லுாரி பதிவாளர் அனில் பூர்த்தி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

தலைமை விருந்தினர் பெங்களூரு பொது சுகாதார மைய இந்திய அறிவியல் கழக பேராசிரியர் பிரதீப் கவுர், 153 இளநிலை மாணவர்களுக்கும் 53 முதுநிலை மாணவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இளநிலை பிரிவு துணை முதல்வர் நிஷாந்த் ராஜன், முதுநிலை பிரிவு துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிம்ஸ் கல்லுாரி முதல்வர் ரேணு கல்வி, ஆராய்ச்சி, நோயாளர் பராமரிப்பு மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடுகளில் பெற்ற சாதனைகளை பட்டியலிட்டார்.

துணைத் தலைவர் ஜோசப் ஆபிரகாம், முதுநிலைத் தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். பொருளாளர் சுசன் தாமஸ், ஆராய்ச்சி பிரிவுக்கான விருதுகளை இளநிலை மாணவர்களுக்கு வழங்கினார்.

சர்வதேச தரம் வாய்ந்த ஆய்விதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்ட பிம்ஸ் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. டாக்டர் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த மாணவிக்கான விருது மற்றும் தங்கப் பதக்கம் பெற்றார். டாக்டர் லிடியா புளோரன்ஸ் சிறந்த அனைத்துத் துறை திறமையாளர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் ஆகிய இரு பி ரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை பெற்றார்.

பேராசிரியர் நாயர் இக்பால் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us