ADDED : ஜூன் 20, 2026 08:00 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (20ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது, போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் இன்று (20ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது. அதே போன்று, சேதராப்பட்டு, வில்லியனுார், பாகூர், மாகியில் உள்ள பள்ளூர், மற்றும் ஏனாம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது.
