/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினை கிராமத்தில் பல்லுயிர் தின விழா
/
கைவினை கிராமத்தில் பல்லுயிர் தின விழா
ADDED : மே 23, 2025 06:46 AM
புதுச்சேரி : கைவினை கிராமத்தில் நடந்த சர்வதேச பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு போட்டியில் கல்லுாரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விலங்குகள், காடுகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும். விலங்குகளின் முக்கியத்துவத்தையும், விலங்குகள் வசிப்பிடத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மே 22ம் தேதி அன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனையொட்டி புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் உள்ள வனவிலங்கு மையத்தில் நேற்று சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் நிகழ்ச்சி நடந்தது.
சிறப்பு விருந்தினராக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குனர் பூபேஷ் குப்தா, தாகூர் அரசு கல்லூரி துணை பேராசிரியர் வசந்த ராஜ், என்.எஸ்.எஸ்,., ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் சுற்றுச்சூழலை பற்றியும் விலங்குகளை பற்றியும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து கல்லுாரி மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.