/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா
/
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த நாள் விழா
ADDED : ஏப் 07, 2025 06:11 AM

திருபுவனை;
புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 87வது பிறந்த நாள் மதகடிப்பட்டில் கொண்டாடப்பட்டது.
ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முருகைய்யன் தலைமை தாங்கி, நம்மாழ்வாரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பொருளாளர் ஜெயராமன் வரவேற்றார்.
பொதுச் செயலாளர் ரவி உறுதிமொழி வாசிக்க, நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 'இயற்கை விவசாயத்தை பேணிக் காப்போம் என, உறுதி மொழி ஏற்றனர்.
புதுச்சேரி இயற்கை விவசாயிகள் சங்க செயலா ளர் சுப்ரமணி நம்மாழ்வாரின் கொள்கைகளை விளக்கி பேசினார்.து ணை தலைவர்கள் பாஸ்கர், ஆதிமூலம், செயலாளர்கள் ஜெயகோபி, ராஜாராமன், முத்துமல்லா, நாகராஜ், திருமால், குமரன், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு கருப்பட்டி அவல் மற்றும் இயற்கை மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.