/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட்டார காங்., தலைவர் பிறந்தநாள் விழா
/
வட்டார காங்., தலைவர் பிறந்தநாள் விழா
ADDED : நவ 19, 2025 08:07 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்., தலைவர் அய்யப்பன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழா கொண்டாடிய வட்டார காங்., தலைவர் அய்யப்பனுக்கு, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெ ரிவித்தனர்.
மேலும், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., பொது செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், மகிளா காங்., தலைவி நிஷா, காங்., கமிட்டி சசிகுமார், தெற்கு மாவட்ட துணை தலைவர் குருமூர்த்தி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் சங்கரன், ஏம்பலம் தொகுதி மோகன்தாஸ் மற்றும் காங்., நிர்வாகிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பிறந்தநாள் விழா கேக் வெட்டப்பட்டு, வீராம்பட்டினம், ஆர்.கே.நகர், தேங்காய்திட்டு மற்றும் பிறந்தநாள் விழா கொண்டாடிய அய்யப்பன் வீட்டு அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின் 2,500 பேருக்கு புடவை வழங்கப்பட்டது.

