/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் நிறுத்தத்தில் துறை அதிகாரிகள் கண்காணிப்பு
/
பஸ் நிறுத்தத்தில் துறை அதிகாரிகள் கண்காணிப்பு
ADDED : நவ 19, 2025 08:07 AM

புதுச்சேரி: பஸ் நிறுத்தங்களில் முறையாக பஸ் மற்றும் டெம்போக்கள் நிறுத்தப்படுகிறதா என, போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, ராஜிவ் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை தெற்கு புற வாயிலில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளும், அங்கு வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அருகில் உள்ள சந்திப்பில் போக்குவரத்து பாதிப்து ஏற்படுவது வாடிக்கையானது. இந்நிலையில் பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தில், பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று ராஜிவ் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில், பஸ்கள் மற்றும் டெம்போக்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனரா என, ஆர்.டி.ஓ., பிரபாகரராவ் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து, நிறுத்தாத பஸ் மற்றும் டெம்போ ஓட்டுநர்களை எச்சரித்து, பஸ் நிறுத்தத்தில் நிறுத்த அறிவுறுத்தினர்.

