ADDED : செப் 14, 2026 07:21 PM
வில்லியனுார்: வில்லியனுார் மாவட்ட பா.ஜ., தலைவர் ஓம்அனிதா பிறந்தநாள் விழா உள்துறை அமைச்சர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
பா.ஜ., வில்லியனுார் மாவட்ட தலைவர் ஓம்அனிதா பிறந்தநாள் விழா வில்லியனுார் தென்கோபுர வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடினர். விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் மாநில பா.ஜ. தலைவர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடினர்.
விழாவில் பா.ஜ., பொதுச்செயலாளர்கள் மோகன்குமார், மாநில துணை தலைவர் ரத்தினவேல், மங்கலம் தொகுதி பொறுப்பாளர் கண்ணபிரான், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், வில்லியனுார் மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜன், சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் பாண்டுரங்கன், விஸ்வநாதன், இளவரசன், ஜெயக்குமார், பிரசன்னா, இளவழுதி, ஊசுடு தொகுதி பொறுப்பாளர் பெருமாள் மற்றும் பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
