தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமண மண்டப நிகழ்ச்சி போக்குவரத்து நெரிசல்

திருமண மண்டப நிகழ்ச்சி போக்குவரத்து நெரிசல்

திருமண மண்டப நிகழ்ச்சி போக்குவரத்து நெரிசல்


ADDED : செப் 14, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : அரியாங்குப்பம்: திருமண மண்டப நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

விழுப்புரம் – நாகப்பட்டினம் பைபாஸ் புதுச்சேரி வழியாக செல்கிறது. சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுார் மார்க்கத்தில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள், கடலுாரில் நகரத்தில் நெரிசலை தவிர்க்க தவளக்குப்பம் – அபிேஷகப்பாக்கம் வழியாக பைபாசில் செல்கின்றன. 

அபிேஷகப்பாக்கம் மெயின் ரோட்டில், தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. திருமண மண்டப நிகழ்ச்சிக்கு கார், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். 

சாலையில் நிற்கும் வாகனங்களால் பஸ் உள்ளிட்ட கனரக வானங்கள் செல்ல முடியாமல் நிற்கின்றன. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

மண்டபத்தில் நிகழ்ச்சி நடக்கும் போது, ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us