
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அ.தி.மு.க.,பிரமுகர் ரஞ்சித்குமார் நாகராஜ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ரஞ்சித்குமார் நாகராஜ்,தனது பிறந்த நாளை ஆதரவாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். பின், மாநில ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கரிடம் வாழ்த்து பெற்றார்.
சந்திப்பின்போது எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசப்பெருமாள், அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க., செயலாளர் ராஜா உடனிருந்தனர்

